திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தொண்டர்களுக்கு முன்னாள் எம்.பி.யும், மா.செ.வுமான ப.குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
‘‘நாளை (19.06.2024 ) தஞ்சை மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையம் வருகை தரும் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு. காலை 6:50 மணிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
அதே சமயம் நிகழ்ச்சிகளை முடித்து சென்னை செல்வதற்காக மாலை 6.00 மணியளவில் திருச்சி விமான நிலையம் வருகை தர உள்ளார். ஆகையால் மேற்கண்ட இரு நிகழ்வுகளிலும் நமது திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தை சார்ந்த கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகள் அனைவரும். தவறாமல் பங்கேற்று அண்ணன் அவர்களை வரவேற்று சிறப்பித்திட வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.