மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து காங்கிரஸ் முடிவு செய்யும் என மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் சரத் பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘ முன்னதாகவே அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவது தொடர்பாக ஒப்புக்கொண்டோம். அதனால் காங்கிரஸ் கட்சி அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சி முடிவு செய்யும்’’ என்றார்.
எதிர்க்கட்சிகள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், துணை சபாநாயகர் பதவியை கேட்டு வலியுறுத்துவோம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. துணை சபாநாயகர் பதவி கேட்டு வலியுறுத்துவீர்களா? என்ற கேள்விக்கு, இந்த விதிமுறை கடந்த மோடி அரசால் கடைபிடிக்கப்படவில்லை.
இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். ஆனால், நல்ல பதில் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என சரத்பவார் பதில் அளித்தார். எனவே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்காந்தி அல்லது மல்லிகார்ஜு கார்கே ஆகிய இருவரில் ஒருவர் தேர்வாகலாம் என்கிறார்கள்.