கள்ளச்சாராய பலி! கண் சிவந்த ஸ்டாலின்! நடந்தது என்ன..?

கள்ளச்சாராய பலிகள் தமிழகத்தில் அவ்வப்போது தமிழகத்தில் நிகழ்ந்தாலும், தற்போது ஏற்பட்ட உயிர்பலிகள் இதுவரை நடந்ததில். இதனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண் சிவந்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து நேர்மையான அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இரு ஆட்சிகளிலும் அவ்வப்போது கள்ளச்சாராய பலிகள் நடந்தாலும், தற்போது 50 பேர் பலியாகியிருப்பதுதான் தமிழகத்தை தாண்டி இந்தியாவையே உலுக்கியிருக்கிறது.

கள்ளச்சாராய மரணத்தின் எண்ணிக்கைக் கூடுவது திமுக அரசுக்குத் தீரா பழியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது முதன் முறையாக கடும் கோபத்தில் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். நேற்று நடந்த நிர்வாகிகள் மீட்டிங், அதன்பின் போன் கால் மூலமாக நடத்தப்பட்ட மீட்டிங்கில் முதல்வர் ஸ்டாலின் கோபமாக பேசி இருக்கிறார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் அவருடன் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர், ஸ்டாலினிடம் சிலபல தகவல்களைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ‘அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நம்பிக்கை வைத்து அவர்களிடம் பொறுப்பைக் கொடுத்தீர்கள். இப்போதாவது உங்களுக்குப் புரிந்திருக்கும்’ என்கிற ரீதியில் அந்த அட்வைஸ் நீள்கிறது.

கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அனைத்தும் அறிந்தவராக, மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பணி புரியும் ஒரு போலீஸ்காரர் இருக்கிறார். அவர்தான் முந்தைய எஸ்.பி.யையும் கலெக்டரையும் தவறாக வழிநடத்தியிருக்கிறார். ஆனால், அவரை தவிர பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த போலீஸ்காரர் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவருடன் சாதி ரீதியாக நெருக்கமானவர். அவரின் தலையீட்டின்படியே நடவடிக்கையில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கள்ளச்சாராய மரணங்கள் மத்திய உள்துறை வரை தமிழக பாஜக தலைவர்களால் கொண்டு செல்லப்பட்டிருப்பதால், இது குறித்து மாநில அரசிடம் ரிப்போர்ட் கேட்டு கடிதம் எழுத டெல்லி ஆலோசிப்பதாகவும் ஸ்டாலினுக்கு தகவல் கொடுக்கப் பட்டுள்ளதாம்.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 39 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. விஷ சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.

உள்ளூர் போலீசாருக்கு தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று இருப்பதாகவும் உள்ளூர் திமுகவினரின் உத்தரவின் பேரில் நடைபெற்று இருப்பதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார். அரசியல் ரீதியாக இந்த விவகாரத்தை கையாளுமாறு தமிழக பாஜகவுக்கு டெல்லியில் இருந்து உத்தரவு கிடைத்துள்ளது. மேற்கண்ட இத்தகைய விபரங்கள் அனைத்தையும் அறிந்ததால்தான் முதன்முறையாக அமைச்சர்கள், அதிகாரிகள் இரு தரப்பின் மீது கோபம் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

இது பற்றி அமைச்சர்களிடம் சரமாரி கேள்விகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளாராம். தலைமை செயலகத்தில் நடந்த மீட்டிங்கில் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார். அமைச்சர்கள் துரைமுருகன், எவ வேலு வேலு, உதயநிதி, மா.சு, மற்றும் தலைமைச்செயலாளர், உள்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டவர்களோடு அவசர ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின். சம்பவம் எப்படி நடந்தது என்பதை அமைச்சர்களும் அதிகாரிகளும் விரிவாக முதல்வருக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

குறிப்பாக, மாவட்ட சட்ட ஒழுங்கு பிரிவும், கலால் பிரிவும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களிடம் மாத மாமூல் வசூலித்து வந்த விபரங்களை பற்றியும் கூறியுள்ளனர். அதைக்கேட்டு, எ.வ வேலுவிடம் இது எப்படி உங்களுக்குத் தெரியாமல் நடந்தது? என்று கடிந்து கொண்டுள்ளார் ஸ்டாலின். சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட அரசியல் தலைகள் சிலருக்கு கப்பம் கட்டப்பட்டு வந்துள்ளது.
இதனாலேயே ஆக்சன் எடுப்பதில் தவறு நிகழ்ந்துள்ளது. ஆக்சன் எடுக்க முயற்சிக்கும் போதெல்லாம் அந்த அரசியல் தலைகள் கலெக்டருக்கும் எஸ்.பி.க்கும் ஃபோன் போட்டு தடுத்திருக்கிறார்கள் என்று முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்கள் அதிகாரிகள். இதைக்கேட்டு, சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தலையிட்டால் என்னிடம் சொல்லுங்கள் என பலமுறை சொல்லியிருக்கிறேன். ஏன் சொல்லவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் கடிந்து கொண்டு இருக்கிறார்’’ என்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது, மாவட்டங்களில் அதிகார மையங்கள் உருவாணது கிடையாது. எந்தவொரு தகவலும் உடனுக்குடன் ஜெயலலிதாவிற்கு வந்து சேர்ந்துவிடும். எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் மாவட்டங்களிலும் உருவாகும் அதிகார மையங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

By R Priyu

Related Post