மெத்தினாலின் ஆபத்து! எச்சரித்த டாக்டர் பா.சரவணன்!

‘‘கள்ளச்சாராயத்திலுள்ள மெத்தினாலை 100 மிலி பருகினாலே உயிருக்கு ஆபத்து. கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மக்களுக்கு போதிய மருந்துகள் இல்லை என மருத்துவர்களே கூறுகிறார்கள். மதுவினால் ஆண்டுதோறும் தமிழகத்தில் மூன்று லட்சம் பேர் பலியாகிறார்கள்’’ என பகீரங்கமாக குற்றச்சாட்டியிருக்கிறார் அ.தி.மு.க. மருத்துவ ரணி இணைச் செயலாளர் பா. டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு

இது தொடர்பாக அ.தி.மு.க. மருத்துவர் அணி இணைச் செயலாளர் பா. டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘‘கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி பலர் பலியாகி உள்ளனர். கள்ளச்சாராயத்தில் மெத்தனால் மனித உடலுக்குள் நுழைந்ததும் ரத்தத்தில் கலந்து அதன் மூலம் சோடியம், பொட்டாசு, குளோரைடு, பைக் கார்பனேட் ஆகியவை மாற்றங்கள் ஏற்படுகிறது. உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்துவிடும். வயிற்றுக்குள் விஷ சாராயம் சென்றவுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அடுத்த சில விநாடிகளில் வயிறும், குடலும் வெந்துவிடும். அதேபோல் கிட்னி பாதிக்கப்படும்.

மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தவர்கள் நுரைநுரையாக வாந்தி எடுப்பார்கள். அந்த வாந்தி எல்லாம் நுரையீரலுக்குச் சென்றுவிடும் என்பதால் சட்டென்று மூச்சு அடைத்துவிடும்.

அதேநேரத்தில் நரம்பு மண்டலம் வழியாக மெத்தனாலின் விஷத்தன்மை மூளைக்கும் பரவுவதால், மூளை செல்கள் உடனே அழிந்துவிடும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அவர்கள் மயக்கமடைந்துவிடுவார்கள். இதை 100 மிலி அருந்தினாலே உயிர் பறிபோகும்.

தற்பொழுது கள்ளச்சாரம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிகப்பட்டவர்களுக்கு உடனடியாக Fomepizol என்ற மருந்தை செலுத்த வேண்டும், அதேபோல் அவர்கள் வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும், அதனைத் தொடர்ந்து அவரின் ரத்தத்தை சுத்திகரித்து சரி செய்ய வேண்டும். ஆனால் இதை செய்ய தவறினால் நிலைமை மோசமாகி மரணம் சம்பவம் நிகழும்.

ஆனால் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் நான் விசாரித்த போது போதிய மருத்துவர்கள் வசதிகள் இல்லை என்றும், பிறகுதான் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தவுடன் உடனடியாக மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டன என்று கூறுகிறார்கள். ஆனால் மருந்துகள் லேட்டாக வந்ததால் மரண சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ளது இதுகுறித்து எடப்பாடியார் வெளியிட்ட தகவல் முழுவதும் உண்மையாகும்.

அதுமட்டுமல்ல மதுவினால் இன்றைக்கு இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது தமிழகத்தில் 2 கோடியே 2 லட்சம் பேர் மது அருந்துகிறார்கள். இதில் ஆண்டுதோறும் மூன்று லட்சம் பேர் மதுவால் மரணம் அடைகிறார்கள் குறிப்பாக 48 சதவீதம் பேர் கல்லீரல் நோயாலும்,26 சதவீதம் பேர் வாய் புற்று நோயாகவும், 26 சதவீதம் பேர் கணையத்தால் பாதிப்பு ஏற்பட்டும், 20 சதவீதம் பேர் காசநோய் பாதிப்பு, 7சதவீதம் பேர் இருதய நோயால் பாதிப்பு அடைகின்றனர் கள்ளச்சாராயம் மரணம் நம் கண் முன்னே தெரிகிறது ஆனால் நம் கண்ணுக்கு தெரியாமலே மதுவினால் வருட தோறும் லட்சக்கணக்கானோர் இறக்கின்றனர் இதன் மூலம் தமிழகத்தில் இளம் விதைகள் அதிகரித்து உள்ளனர்’’ எனக் கூறினார்.

By R Priyu

Related Post