திமுக கூட்டணியை உடைக்க எடப்பாடி ப்ளான்..!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்த நிலையில், தி.மு.க. 40க்கு 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில்தான் கள்ளச்சாராய பலி தமிழகத்தைத் தாண்டி, இந்தியாவையே உலுக்கியது. இந்தவிவகாரத்தில் தி.மு.க.வை விடாமல் விரட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

கள்ளச்சாராய விவகாரம், மணல் விவகாரம் என ஆளும் தி.மு.க.விற்கு அடுத்தடுத்த சிக்கல்கள் வரும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என எண்ணிய எடப்பாடி பழனிசாமி அதற்கான காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டாராம்.

கடந்த 1 வாரத்தில் எடப்பாடி செய்த 4 சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஏற்கனவே சாராயம் காய்ச்சிய 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

முதல் ஆளாக இந்த விவகாரத்தில் லீகல் டீமை அனுப்பி எடப்பாடி வழக்கு போட்டுள்ளார். கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி தொடர்பாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. முதல் ஆளாக எடப்பாடி பழனிசாமி நேரடியாக கள்ளக்குறிச்சி சென்றுள்ளார். அங்கே சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு உள்ளார். அதோடு இல்லாமல் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போராட்டமும் மேற்கொண்டார். இதோடு இந்த விவகாரத்தில் ஆளுநர் உடன் சந்திப்பு, உண்ணாவிரதம் என்று எடப்பாடி பழனிசாமி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார் .

இப்படி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அடித்து ஆடிக்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.தற்போது திமுகவின் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி முக்கியமான பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளாராம்.

அதன்படி திமுகவின் கூட்டணியை வட தமிழ்நாட்டில் உடைக்க எடப்பாடி முடிவு செய்துள்ளதாரம். வட தமிழ்நாட்டில் திமுக உடன் இருக்கும் ஒரு கட்சியையும். திமுக உடன் நெருக்கமாக உள்ள இன்னொரு கட்சியையும் இழுக்க எடப்பாடி ஆலோசனை செய்து வருகிறாராம். இதற்காக ஏற்கனவே எடப்பாடி பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டாராம்.

இதோடு காங்கிரஸ் கட்சியையும் கூட்டணிக்குள் இழுக்க எடப்பாடி முடிந்த அளவு திட்டங்களை வகுத்து வருகிறாராம். அதிமுக பொதுச்செயலாளர் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் மதிப்பிற்குரிய சோனியா காந்தி, மதிப்பிற்குரிய ராகுல் காந்தி என்று குறிப்பிட்டு பேசி இருந்தார். பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிலையில் அதிமுக காங்கிரஸ் இடையே கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்தது.

கடந்த வருடம் அதிமுக – பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தார். இஸ்லாமியர்களே.. நீங்கள் ஆசைப்பட்டது போல.. நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அதிமுக தனியாக வந்துவிட்டது. பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு அதிமுக தனியாக வந்துவிட்டது. இனி நாங்கள் தனியாகவே கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்தார். அப்போதே அவரின் பிளான் தமிழ்நாடு அரசியலில் பலருக்கும் தெரிந்துவிட்டது. அதன்பின் லோக்சபா தேர்தலிலும் அதிமுக தனித்து போட்டியிட்டது. இஸ்லாமியர்களை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி தீவிரமாக முயல்கிறாரோ.. அதுதான் அவரின் திட்டமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை உள்ளே இழுக்கவும் எடப்பாடி திட்டமிட்டு வருவதாக செய்திகள் வருகின்றன.

சமீபத்தில் செல்வப் பெருந்தகை பேசிய பேச்சுகள்தான் இதற்கெல்லாம் காரணம். இந்த நிலையில்தான் திமுகவின் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கியமான பிளான் ஒண்று கையில் எடுத்துள்ளாராம்.

அதன்படி காங்கிரஸ் – திமுக கூட்டத்தை உடைக்க இந்த பிளான் எடுக்கப்பட்டு உள்ளதாம். அடுத்த 6 மாதங்களில். அதாவது பிப்ரவரிக்கு முன் கூட்டணியை முறிப்பதே அவரது முக்கிய நோக்கமாம். திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணியில் பெரிய விரிசல் இல்லை. சமீபத்தில் கார்த்தி சிதம்பரம் முதல்வர் வேட்பாளர் என்று போஸ்டர் ஒட்டியது, இணையத்தில் கார்த்தி சிதம்பரம் – உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள் இடையே கூட இதனால் மோதல் ஏற்பட்டது. இணையத்தில் இவர்களுக்கு இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது. அதேபோல் நேற்று செல்வப்பெருந்தகையை முதல்வர் என்றதும் சர்ச்சையானது. இதெல்லாம் காங்கிரஸ் – & திமுக இடையே பிளவை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன் கூட்டணியை முறிக்கலாம் என்ற திட்டத்தில் எடப்பாடி காய் நகர்த்த தொடங்கி உள்ளாராம். இதற்காக காங்கிரஸ் கட்சியில் ஆலோசகராக இருக்கும் சுனிலும் எடப்பாடிக்கு மறைமுகமாக உதவி வருகிறாராம்.

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. 40க்கு 40 வெற்றி பெற்றும் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. அதே சமயம், சட்டமன்றத் தேர்தலை விட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி..!

By R Priyu

Related Post