தி.மு.க. கூட்டணியை உடைத்து, அ.தி.மு.க.வுன் கூட்டணி சேராமல் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைமையில் மூன்றாவது அணி அமைத்து 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறாராம் நடிகர் விஜய்!
நடிகர் விஜய் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பார் என்று கூறப்பட்டது. அதற்கான காரணங்களையும் அடுக்கினார்கள். அதாவது, அதிமுகவோடு விஜய் கூட்டணி வைப்பாரா என்ற கேள்விகள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வந்தது. இவர்கள் இருவரும் கூட்டணி வைத்தால் திமுகவை வீழ்த்த முடியும் என்று வாதங்கள் வைக்கப்பட்டன.
நடிகர் பவன் கல்யாண் ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வராக உள்ளார். இதற்கு காரணம் வலிமையான ஜெகன் மோகன் ரெட்டியை அவர் வீழ்த்தியதுதான். அதற்கு தெலுங்கு தேசத்தின் சந்திர பாபு நாயுடு – பவனின் ஜன சேனா கட்சிகள் ஒன்றாக கூட்டணி வைத்தது முக்கிய காரணமாக அமைந்தது.
அந்த பார்முலாவை தமிழ்நாட்டில் விஜய் கொண்டு வரப்போகிறார் என்று தொடக்கத்தில் செய்திகள் வந்தன. அதாவது அதிமுக உடன் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி வைக்கும்.. ஜெகனை வீழ்த்தியது போல ஸ்டாலினை வீழ்த்துவார்கள் என்றெல்லாம் அதிமுகவினர் வாதங்களை வைத்தனர். இவர்கள் இருவரும் கூட்டணி வைத்தால் திமுகவை வீழ்த்த முடியும் என்று வாதங்கள் வைக்கப்பட்டன. ஆனால் விஜய் அந்த முடிவில் இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் திட்டம் அவருக்கு இல்லை, மூன்றாவது அணியை அமைத்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் நடிகர் விஜய்!
விஜய் அமைக்க போகும் மூன்றாவது அணி பற்றியும், அதிமுகவை அவர் ஏன் புறக்கணிக்கும் முடிவில் இருக்கிறார் என்பது பற்றியும் தமிழக வெற்றிக்க கழகத்தில் விஜய்க்கு நெருக்கமானவர்கள் சிலரிடம் பேசினோம்.
சார், ‘‘விஜய் தொடங்குவது தனி கட்சி. முதல் தேர்தலிலேயே அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் விஜய் மீது முத்திரை குத்தப்படும். அ.தி.மு.க. அரசின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. தவிர,. அதிமுகவுடன் ஏற்கனவே சர்க்கார் சமயத்தில் இருந்தே , அதற்கு முன் தலைவா சமயத்திலும் விஜய்க்கு பிரச்சனை உள்ளது. அதனால் விஜய் அவர்களுடன் செல்ல வாய்ப்பு குறைவு. (ஜெயலலிதாவுக்கும் விஜய்க்கும்தான் மனக் கசப்பே தவிர எடப்பாடி பழனிசாமியுடன் இல்லை என அ.தி.மு.க. தரப்பில் கூறுகிறார்கள்).
நடிகர் விஜய் ரகசியமாக கூட்டணி பேச்சு வார்த்தைகளை தொடங்கிவிட்டார். அதாவது, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை உடைத்து தங்கள் பக்கம் கொண்டு வருவதே அவரின் திட்டம். முக்கியமாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுகளில் ஒன்றை குறிவைக்கிறார் விஜய். ஏற்கனவே இவர்களை இழுக்க அதிமுக முயன்றது. ஆனால் அதிமுக எப்போது வேண்டுமானாலும் பாஜகவுடன் சேரலாம். அதனால் பாஜக மீதான அதிருப்தி காரணமாக அதிமுகவையும் இந்த கட்சிகள் புறக்கணித்தன.
ஆனால் விஜய்க்கு அப்படி ஒரு பிம்பம் இல்லை. அவர் பாஜகவுடன் நெருக்கமாக இல்லை. பாஜக பக்கம் செல்ல வாய்ப்பு இல்லை. இதனால் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுகளில் ஒன்றை குறிவைக்கிறார். அவர்களிடம் பேசி வருகிறார். ஆனால் இன்னும் அவர்கள் ஓகே சொல்லவில்லை. இன்னும் காலம் இருக்கிறது என அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டில் கூட்டணி காட்சிகள் மாறலாம். இவர்கள் இல்லையென்றால் நாம் தமிழரை வைத்து தனி அணியை உருவாக்கும் திட்டமும் விஜய்க்கு உள்ளது. ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி எழும். 8பலரும் . தமிழ்நாட்டில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் + அதிமுக + நாம் தமிழர் கூட்டணி உருவாகலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதை விட திமுக கூட்டணியை உடைப்பதே விஜயின் முக்கிய திட்டம்.
வருகிற 2026ல் முதல்வர் நாற்காலியை நோக்கியே விஜய்யின் பயணம் இருக்கும். அதனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில், விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன்தான் கூட்டணி வைப்பார்’’ என அடித்துக் கூறினார்கள்.