‘தி.மு.க.வின் பிடியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள்’ என மருது அழகுராஜ் தெரிவித்திருப்பதுதான், அ.தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில்,
தெய்வ
சாட்சியான
உண்மை..
சமீபத்தில் தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் ஒருவரை பொது நிகழ்ச்சி ஒன்றில் சந்திக்க நேர்ந்தது.
அப்போது அவர் சொன்ன வார்த்தை. 2026-ல் தி.மு.க. சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடத்த திட்டமிட்டிருக்கிறது.
அந்த திட்டம் 2026-ல் கைகூடும் வரை உங்க அண்ணா தி.மு.க. ஒருபோதும் ஒன்றிணையாது. அதனால உங்களை போன்ற திராவிட இயக்க சிந்தனையாளர்கள் தி.மு.க.வில் இணைய வேண்டும் என்றார்.
இதே கருத்தை தான் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தி.மு.க. சட்ட அமைச்சருமான ரகுபதி “அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லாம் தி.மு.க.வில் இணைய வேண்டும்” என வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்.
இப்பச் சொல்லுங்க. எடப்பாடியும், அவரது கையாட்களான ஜெயக்குமார், கே.பி.முனுசாமி போன்றோர் யாருடைய பிடியில் இருந்து கொண்டு யாருக்காக உழைக்கிறார்கள் என்று?
-என்ன நாஞ் சொல்றது…’’ என்று பதிவிட்டிருக்கிறார்.