பாஜகவின் அடுத்த இலக்கு தமிழகம்! மருது அழகுராஜ் சூசகம்!

அ.தி.மு.க.வில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கவிதை நடையில் கருத்துக்களை வெளியிட்டு வருபவர்தான் கவிஞர் மருது அழகுராஜ்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘‘தாமரைக்குளம்’’ எனும் தலைப்பில் மருது அழழுராஜ் எழுதிய கவிதைதான் அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்களை சிந்திக்க வைத்திருக்கிறது. இந்த பதிவில் பா.ஜ.க.வின் அசுர வளர்ச்சியையும், பல மாநிலங்களில் தாமரை மலர்ந்ததையும் புட்டுபுட்டு வைத்திருக்கிறார்.

அதாவது மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘அரைநூற்றாண்டு காலம் தேசத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி தற்போது மூன்று மாநிலங்களில் மட்டுமே அது ஆளும் கட்சியாக இருக்கிறது.

ஆனால் ஜனசங்கமாக இருந்து என்பதுகளுக்குப் பிறகே அரசியல் கட்சியாக மாறிய பா.ஜ.க இன்று பன்னிரெண்டு மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கிறது.

காஷ்மீரில் ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா என்னும் வம்சாவளி அரசியல் தொடங்கி.. உத்திரப் பிரதேசத்தில் முலாயம்சிங் வகையறாக்கள்..மராட்டியத்தில் தாக்கரேயின் சந்ததிகள்.. பீகாரில் லல்லுபிரசாத் யாதவ் குடும்பத்தார் அதைத் தொடர்ந்து ஒடிசாவில் பன்னெடுங்கால பட்நாயக்குகளின் ஆதிக்கம் வரை….

இப்படிபல குடும்பங்களின் வாரிசு முறை அரசாட்சிகளை வழி அனுப்பி வைத்திருக்கும் பாஜகவின் அடுத்த இலக்கு தமிழகமாகவே தோன்றுகிறது.

ஆம் தமிழகத்தில் மக்களாட்சியையே ஒரு மன்னராட்சியாக நடத்தி வரும் திமுகவை வீழ்த்த திட்டமிடும் பாஜக நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி புண்ணியத்தால் பதினோரு சதவீத வாக்குளை தொட்டு மூன்றாவது பெரிய கட்சி என்னும் முன்னேற்றம் கண்டு காலிறுதி ஆட்டத்தில் அது தகுதி பெற்றுவிட்ட நிலையில்…

அடுத்து 2026-சட்டமன்ற தேர்தலை அரையிறுதி ஆட்டமாக முன்னெடுக்கவும் அதில் அண்ணா திமுக-வை முந்தி இரண்டாம் பெரிய கட்சி என்கிற இடத்தை எட்டிப்பிடித்து..?

அதன் பிறகு திமுக வுடனான இறுதி ஆட்டத்திற்கு அதாவது ஃபைனல் ஆட்டத்திற்கு பாஜக 2031-ஐ தேர்ந்தெடுத்து இருப்பதாகவே தோன்றுகிறது.

இந்த அத்தனை திட்டங்களையும் கச்சிதமாக நிறைவேற்றி முடிக்கும் வரை அதிமுகவுக்கு மதிகெட்ட எடப்பாடியின் தலைமை அவசியம் என்னும் சாணயக்ய திட்டத்தோடு தன் அரசியல் நகர்வுகளை பாஜக தமிழகத்தில் முன்னெடுத்து வருகிறது.

ஆக முறையாக திட்டமிட்டு கைவிடாத பயிற்சிகளோடு களம்காணும் எந்த முயற்சியும் பூத்து காயாகி கனியாகும் என்பதற்கு தாமரைப் பூ கட்சியே தகுந்த எடுத்துக்காட்டு… என்ன நாஞ் சொல்றது…’’ என பதிவிட்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி போன்றோர் அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பில் இருக்கும்வரை தமிழகத்தில் தி.மு.க.விற்கு மகிழ்ச்சி… பா.ஜ.க. முயற்சியில் இறங்கியிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்!

By R Priyu

Related Post