சரவணா மல்டி ஸ்பெஷா லிட்டியில் பல் மருத்தும்! மகிழ்ச்சியில் மதுரை மக்கள்!

அ.தி.மு.க. மருத்துவர் அணி மாநில இணைச் செயலாளரும், மதுரையைச் சேர்ந்தவருமான டாக்டர் சரவணன் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவையை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.

ஒருபுறம் மருத்துவச் சேவை… மறுபுறம் மக்கள் சேவை என தொண்டர்ந்து பணியாற்றி வரும் டாக்டர் சரவணன், புதிதாக பல் மருத்துவ சேவையையும் தொடங்கியிருப்பது பெரிதாக வரவேற்பை பெற்றிருக்கிறது.

மதுரை சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் விரிவாக்கமாக நேற்று (15.09.2024 ) புதிதாக பல் மருத்துவ மையம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவனரும், மருத்துவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் அவர்கள் தலைமையேற்றார். இம்மையத்தினை விஷ்வா அபார்ட்மெண்ட்ஸ் நிறுவனர் ரகுநந்தன், மற்றும் இன்ஜினியர் செந்தில் முருகன் தொடங்கி வைத்தனர் .

இந்நிகழ்வில் கனிமொழி சரவணன் , விஜயலட்சுமி , டாக்டர் முருக பொற்செல்வி, சாந்தி , ஜெய கௌரி , சுதா இளங்கோவன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர் .இந்நிகழ்ச்சியில் தாய் மூகாம்பிகை சேதுராமன், சாந்தி டிரஸ்ட் நிறுவனர் ஜெயக்கொடி, தனசேகரன், கிருஷ்ணா புரமோட்டர்ஸ் நிறுவனர் இளங்கோவன், டாக்டர் ஜெய விஷ்வ தர்ஷன் டாக்டர் நேஷ்மா சரவணன், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவின் ஏற்பாடுகளை சரவணா மருத்துவமனையின் இயக்குனரும் இருதய அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் அம்ரீத்குமார் சரவணன் மற்றும் மையத்தின் பல் மருத்துவர் டாக்டர் சாதுர்யா அம்ரித் ஆகியோர் செய்திருந்தனர்.

இம்மையத்தினை பற்றி டாக்டர் சாதுர்யா அம்ரித் கூறும் போது ‘‘இம்மையத்தில் A I தொழில்நுட்பத்துடன் கூடிய SCAN O என்ற அதி நவீன கருவி கொண்டு நோயாளிகளின் பற்களில் உள்ள நோய்களை துல்லியமாக கண்டறிந்து உடனடியாக நோயாளியின் செல்போனிற்கு வாட்ஸ் அப் மூலம் ரிப்போர்ட் அனுப்பப்படும். பல்வேறு பல் சம்மந்தமான நோய்களுக்கு சரவணா மருத்துவமனையின் தாரக மந்திரமான குறைந்த செலவில் குறைவில்லாத மருத்துவம் அளிக்கப்படும்’’ என்றார்.

மதுரை சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மதுரை மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் வந்து குறைந்த செலவில் தரமான சிகிச்சையை பெற்றுவந்த நிலையில், தற்போது, பல் மருத்துவமும் குறைந்த செலவில் தொடங்கப்பட்டிருப்பது வரவேற்பை பெற்றிருக்கிறது.

By R Priyu

Related Post