துணை முதல்வருக்கு செல்கோல் கொடுத்த எஸ்.ஜோயல்!

தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு செங்கோல் கொடுத்து வாழ்த்து பெற்றார் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல்!

தூத்துக்குடி எஸ்.ஜோயல் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில்,

‘‘அன்னைத் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள,
வரிப்புலி பட்டாளத்தின் வரலாற்று நாயகர்…

புதிய சரித்திரம் படைக்கும்
இந்தியாவின் இரும்பு இளைஞர்…

தமிழகத்தின் ‘இளம் தலைவர்’
என் ஆருயிர் அண்ணன்;
மாண்புமிகு துணை முதல்வர்
அவர்களை நேரில் சந்தித்து செங்கோல் வழங்கி வாழ்த்தி மகிழ்ந்தேன்!

என்றும் உங்கள் விழியசைவில்..!’’ என பதிவிட்டிருந்தார்.

தூத்துக்குடி எஸ்.ஜோயலைப் பொறுத்தளவில் உதயநிதியின் நிழலாக வலம் வந்து இளைஞரணியில் துடிப்புடன் பணியாற்றக்கூடியவர். கடந்த சட்டமன்றத் தேர்தலாகட்டும், நாடாளுமன்றத் தேர்தலாகட்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் உதயநிதி ஸ்டாலின் நினைப்பதை செய்து காட்டக்கூடியவர்தான்!

தி.மு.க. இளைஞரணியில் துடிப்புடன் பணியாற்றுபவர்களுக்கு விரைவில் முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஆட்சியில் முக்கியத்துவம் பெற்ற உதயநிதி ஸ்டாலின், கட்சியிலும் சில மாற்றங்களை கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அந்த வகையில் தூத்துக்குடி எஸ்.ஜோயலுக்கும் முக்கிய பொறுப்பை உதயநிதி வழங்கி, சர்ப்ரைஸ் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருப்பதுதான், ஜோயலின் ஆதாரவாளர்களை அகமகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

By R Priyu

Related Post