தமிழகத்தில் அ.தி.மு.க. இழந்துள்ள பத்து சதவீத வாக்குகளை, அக்கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணி மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்ற தொணியில் நேற்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தமிழ்நாட்டில் 10 சதவீத வாக்குகளை இழந்துவிட்டோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் வாக்குகளை ஈர்க்கவும் 2026 தேர்தலில் வெற்றி பெறவும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் எனவும் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக வலைதளங்களில் தீவிரமாக பணியாற்ற எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளராக வி.வி.ஆர். ராஜ் சத்யன் நியமனம் செய்யப்பட்ட பிறகு, ஆளும் தி.மு.க.விற்கு கடும் நெருக்கடிகளை அ.தி.மு.க. கொடுக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே சமயம் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் கடும் போட்டிகள் நிலவும்.
காரணம், இளைஞர்களின் வாக்குகளை குறிவைத்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களத்தில் இறங்குகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்ற பிறகு 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறார். ஏற்கனவே 200 தொகுதிகளை டார்கெட் வைத்து களத்தில் தற்போதே இறங்கிவிட்டது தி.மு.க.!
இந்த நிலையில்தான், குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் தி.மு.க., த.வெ.க.விற்கு இருக்கும் இளைஞர்கள் பட்டாளம் அ.தி.மு.க.விற்கு இல்லை என்பதுதான் நிஜம். இந்த நிலைமையை மாற்ற அ.தி.மு.க. ஐ.டி.விங்கின் மாநிலச் செயலாளர் ராஜ் சத்தியன் சில வியூகங்களை வகுக்கத் தொடங்கியிருக்கிறாராம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் ஐ.டி. விங் மூலமாக இளைஞர்களை எந்தெந்த வகைகளில் கவரமுடியும் என ஆலோசனை நடத்தி வருகிறார். அதே சமயம் ஆளுங்கட்சியின் தவறுகளை அடித்தட்டு மக்களிடத்திலும் கொண்டு செல்லவேண்டும் என அதற்கான திட்டங்களையும் தீட்டி வருகிறாராம் ராஜ் சத்தியன்.
எனவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் இழந்த 10 சதவீதத்திற்கும் மேலாள வாக்குகளை பெறும் முயற்சியில் அ.தி.மு.க. ஐ.டி.விங் களத்தில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.