அதிமுகவை கைப்பற்றும் எஸ்.பி.வி! சசிகலாவின் மாஸ்டர் பிளான்!

அதிமுகவை எப்படியாவது ஒன்றிணைக்க வேண்டும் என சசிகலாவும், ஓ.பி.எஸ்.ஸும் அறிக்கைவிடுத்தும் பலனில்லாத நிலையில், சசிகலா அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறாராம்.

அதிமுகவை ஒன்றிணைக்க சசிகலா எடுத்துள்ள அடுத்த அஸ்திரம் குறித்து போயஸ்கார்டன் வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ‘‘சார், எடப்பாடி பழனிசாமி பத்தாவது முறையாக தோல்வியைத் தழுவியிருக்கிறார். ஆனால், பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

‘நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், அடுத்த சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற படிப்பினையை கொடுத்திருக்கிறது’ என எடப்பாடி பழனிசாமி சொல்லியதோடு சரி. அடுத்த கட்ட நகர்களை அப்படியே தள்ளிப்போட்டுவிட்டார். காரணம், தற்போதைக்கு அமைதியாக இருந்தாலே எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

அ.தி.மு.க. இனிமேலும் ஒன்றிணையாமல் இருந்தால் நல்லதல்ல… என முடிவெடுத்த சசிகலா போயஸ் கார்டனுக்கு வாருங்கள் என அழைப்பு கொடுத்தும் எந்த ரியாக்ஷனும் எழவில்லை. இந்த நிலையில்தான் எஸ்.பி.வேலுமணியை வைத்து சில காய்களை நகர்த்த சசிகலா முடிவு செய்திருக்கிறாராம்.

அதாவது, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள், ‘அண்ணாமலை மீதுதான் கோபத்தில் இருக்கிறார்கள். அண்ணாமலையை மாற்ற வேண்டும்’ எனக்கூறிதான் டெல்லிக்கு பலமுறை சென்றும் பலனில்லை. அதாவது, அடுத்த கட்சித் தலைவரை எடப்பாடி தரப்பு மாற்ற முயற்சிப்பதை, அக்கட்சித் தலைமை எப்படி ஏற்றுக்கொள்ளும்?

தவிர, தமிழகத்தில் தடுமாறிக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க. முதலில் அ.தி.மு.க.வை காப்பாற்ற வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையின்கீழ் அ.தி.மு.க. இருந்தால் காப்பாற்ற முடியாது. எனவே, 2026 சட்டமன்றத் தேர்தலை எஸ்.பி.வேலுமணி தலைமையில் எதிர்கொள்ள வேண்டும் என சசிகலா தரப்பு முடிவு செய்திருக்கிறது.

அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பிற்கும், முதல்வர் பதவிக்கும் வர எஸ்.பி.வேலுமணிக்கும் அதிக விருப்பம் இருக்கிறது. இதற்கு சசிகலா, டி.டி.வி., ஓ.பி.எஸ். ஆகிய மூவர் மட்டுமில்லாமல், ‘மேலிடமே’ ஒத்துக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்துப் போட்டியிடும் நிலையில், கடந்த 2011 தேர்தல் முடிவைப் போல், தமிழகத்தில் பா.ஜ.க. (அப்போது தே.மு.தி.க. எதிர்க்கட்சியாக அமர்ந்தது, தி.மு.க.வின் நிலை மோசமானது) வலுவான எதிர்க்கட்சியாக அமரவும் வாய்ப்பிருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே. எஸ்.பி.வேலுமணியை வைத்தே, அ.தி.மு.க. சுழல ஆரம்பித்திருக்கிறது. எஸ்.பி.வேலுமணியை வைத்தே எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது’’ என்றார்.

எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்..!

By R Priyu

Related Post