நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. இந்த நிலையில்தான் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற உதயநிதி தலைமையில் சீனியர் அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த கவுன்சிலரும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தீவிர விசுவாசியுமான வீரமணிகண்டன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ‘40ம் நமதே நாடும் நமதே..!’ என அக்டோபர் 21ம் தேதி 2023ம் ஆண்டில் தனது வாட்ஸப் ஸ்டேட்ஸ்ஸாக வைத்திருந்தார்.

தி.மு.க. தலைமை வருகிற சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் நிச்சியம் வெற்றி பெற்றாக வேண்டும் என மன உறுதியுடன் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறது. இந்த நிலையில்தான் துறையூர் தி.மு.க. கவுன்சிலர் வீரமணிகண்டன் ‘234க்கு 201 வெற்றி நிச்சயம்’ என தனது வாட்ஸ் ஸ்டேட்டஸாக வைத்திருக்கிறார்.
கடந்த நாடளுமன்றத் தேர்தலில் 40 நமதே என்று வைத்திருந்தார். தற்போது தி.மு.க. 201 தொகுதிகளில் வெற்றி உறுதி என்ற வகையில் வைத்திருப்பதுதான் துறையூர் உடன் பிறப்புக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
உதயநிதியின் தீவிர விசுவாசியான வீரமணிகண்டன், சமீபத்தில் துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட பின்பு அவரிடம் ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.