‘அண்ணா தி.மு.க. ஒன்றிணைந்து 2026ல் ஆட்சியைப் பிடித்து அடிமட்டத் தொண்டர்களின் கனவை நிறைவேற்ற வேண்டும்’ என்ற எண்ணவோட்டத்தில் மருது அழகுராஜ் எடப்பாடிக்கும், அவரது சகாக்களுக்கும் புரியும் வகையில் தினந்தோறும் செய்திகளைப் பதிவிட்டு வருகிறார். ஆனால், ‘செவிடன் காதில் ஊதிய சங்காகவே’ இருக்கிறது.
இன்றைக்கு நடந்த அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பு பற்றி பேச்சு எழுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்னெச்சரிக்கையாக எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கைக்கு பலன் கிடைத்து விட்டது. வழக்கம் போல் சம்பிரதாயமாக முடிந்து விட்டது ‘அவசர’ செயற்குழு கூட்டம்.
இந்த நிலையில்தான் மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில், ‘‘அண்ணா திமுகவின் பன்நோக்கு பரிதாபம்’’ என்ற தலைவர் பதிவிட்ட கருத்துதான் அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கிறது. ஆனால், எடப்பாடி தரப்பு மட்டும் சிந்திக்காமல் இருப்பது ஏனோ…?
மருது அழகு ராஜ் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கோவை திருப்பூர் நீலகிரி நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்கள் மற்றும் தென்மேற்கு மாவட்டமான கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளுக்கு பா.ஜ.க கூட்டணி வேண்டும் என்பது கோரிக்கை..
நாகை திருவாரூர் தஞ்சை திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும்
புதுக்கோட்டை இராமநாதபுரம் சிவகங்கை மதுரை தேனி திண்டுக்கல் விருதுநகர் திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட நிர்வாகிகளுக்கு ஓ.பி.எஸ் சசிகலா தினகரன் மூவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பது கோரிக்கை..
சேலம் தருமபுரி வேலூர் திருவள்ளூர் காஞ்சிபுரம்திருவண்ணாமலை விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி பெரம்பலூர் உள்ளிட்ட வட மற்றும் வடமேற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு பாமக கூட்டணி வேண்டும் என்பது கோரிக்கை…
இதை எல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாத எடப்பாடிக்கோ கொடநாடு வழக்கு சம்பந்தி மீதான 4800 கோடி டெண்டர் முறைகேட்டு வழக்கு போன்ற தன்னை சூழ்ந்திருக்கும் அபாயங்கள் நீங்கும் வரை திமுக வுடனான திரைமறைவு கூட்டணி அவசியம் என்பது மட்டுமே எடப்பாடி முன்னெடுக்கும் கோரிக்கை…
இதுதான் நிகழ்கால அதிமுக வின் பன்நோக்கு பரிதாபநிலை.. என்ன நாஞ் சொல்றது..!’’ என பதிவிட்டிருக்கிறார்.
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரல்ல… முதல்வராகவே ஆவார் என்பதில் சந்தேகமில்லை..!