அ.தி.மு.க.வின் எதிர்காலமே கேள்விக்குறியாகி வருகிறது. காரணம், ஜெயலலிதாவே ‘மறப்போம்… மன்னிப்போம்..!’ என்றார். ஆனால், எடப்பாடி பழனிசாமி மறந்து மன்னித்தாலும் கட்சி நம்மை விட்டுப் போய்விடும் என்பதால், மறக்கவும் இல்லை… மன்னிக்கவும் இல்லை.

இந்த நிலையில்தான் ‘2026 ல் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையாதா?’ என காத்துக்கொண்டிருக்கும் கோடான கோடி தொண்டர்களின் குரலாக ‘ஒற்றுமை’யை வலியுறுத்தி வருகிறார். அம்மாவின் எழுத்துக்களாக திகழ்ந்த மருது அழகுராஜ்.
‘‘கனாக்காலம்’’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ்,
‘‘உடைந்த பொருட்களை என்ன தான் ஒட்டிச் சேர்த்தாலும் அது அதன் இயல்பு நிலைக்கு என்றுமே திரும்பாது…
கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனிக் குடித்தனங்கள் உருவெடுப்பது சகஜம்…
ஆனால் தனிக் குடித்தனங்கள் மீண்டும் கூட்டுக் குடும்பங்களாகி ஜெயித்த சரித்திரங்கள் அரிதினும் கடினம்..
தனிக்கடை நடத்திப் பழகியவர்களுக்கு கூட்டுத் தொழிலில் நாட்டம் இருக்காது..
அதிலும் ஒருவரது செல்வாக்கை வைத்து அந்த ஒருவரது செல்வத்தை வைத்து அடிபணிந்து உழைத்தவர்கள்…
இன்று ஆளாளும் அதிபர்கள் ஆகிவிட்ட பின்பு ஆளுமையும் தேறாது…
அடிமைத் தனத்தோடு அடிபணிந்து நடந்திட அன்றுபோல் ஆட்களுமே வாராது…
சரி, அதையும் கடந்து நல்லது நடந்தால் அது… விதிவசத்தால் ஆன விதிவிலக்கு ஆகுமே..
என்ன நாஞ் சொல்றது..!’’ என பதிவிட்டிருக்கிறார்.