மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ‘ஒருவருக்கு முதல்வர் பதவியை கொடுத்துவிட்டு… அவர் திருப்பி அந்த பதவியை கொடுத்ததாக வரலாறுகிடையாது… ஆனால், அன்புச் சகோதரர் ஓ.பி.எஸ். திருப்பிக் கொடுத்திருக்கிறார்’ என ஓ.பன்னீர் செல்வத்தை மனதார பாராட்டியிருந்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா!
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, சிறைவாசம் செல்லும் முன்பு, அ.தி.மு.க.வை அரியணையில் ஏற்றிய பங்கு சசிகலாவிற்கு உண்டு என்பதை தமிழகத்தில் உள்ள சிறிய குழந்தைக்குக் கூட தெரியும். ஆனால், அந்த சசிகலாவிற்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தை காலம் கூட மன்னிக்காது. அதைத்தான் மருது அழகுராஜ் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக ‘‘சின்னம்மா அவர்களுக்கு…’’ எனும் தலைப்பில் பதிவிட்டுள்ள மருது அழகுராஜ்,
‘‘‘சிறைபோகும் அவஸ்தையில் அவசரத்தில் பாத்திரம் அறியாது இட்ட பிச்சை…
இன்று அதிமுகவையே அழித்து முடிக்கும் சர்ச்சை ஆனபிறகும் அமைதி எதற்கு..! கூவத்தூரில் தாய் என்று குப்புற விழுந்தவன்…
கோட்டையில் அமர்ந்து அடித்த கொள்ளை கொழுப்பில் நாய் என்று நன்றி மறந்து ஏசியபிறகும்…. எடுபட்ட பயலோடு சமாதானம் எதற்கு..?
அம்மா வசித்த கோயிலாம் கொடநாடுல நடந்தகொடுமைக்கு நீதிகேளுங்க.. உங்களை நம்பி ஊழியம் செய்த நேபாளத்து கூர்க்கா உசுருக்கு நியாயம் கோருங்க…
அம்மாவின் டிரைவர் கனகராஜ் அப்பாவி இளைஞன் தினேஷ் ஆகியோரதுமர்மச் சாவு விவகாரம் மக்கிப் போவதற்குள் சீக்கிரமாகசி.பி.ஐ-க்கு போங்க..
கட்சி அழியுதேன்னு எடப்பாடியிடம் இருந்து கொண்டேகைபிசைந்து நிற்கும் கரங்களைஇனங்கண்டு சேருங்க..
மொதல்ல கழகத்தின்பரதன் ஓ.பி.எஸ்..களத்தில் நின்று போராடுற மக்கள் செல்வர்டி.டி.வியையும்கலந்து பேசி கழகத்தை காத்திடும் கணக்கை போடுங்க..
கூடவே அபகரிப்பு எடப்பாடியைநாள் தவறாது நையப்புடைக்கும் நல்ல பழனிச்சாமி கே.சி.பி.உள்ளிட்டஒருங்கணைப்பு குழுவோடும் உட்கார்ந்து பேசுங்க…
எடப்பாடியை அகற்றி விட்டு எல்லோரையும் ஒன்னு சேர்க்க முதல் முயற்சிக்கு சீக்கிரமா முகூர்த்தம் குறிங்க..
கட்சியை பிளந்து வச்சு கருப்பு சிவப்பு கட்சிக்கு கைக்கூலி வேலை செய்யும் எடப்பாடி நரியின் சூழ்ச்சியை பொதுக்குழு கூட்டி போட்டு உடைங்க…
பத்துத் தோல்விக்கு முற்று வைத்து பச்சிலையாம் ரெட்டை இலையை வெற்றிச் சின்னமாய் மீண்டும் துளிர்க்க வைத்து அம்மா ஆட்சிக்கு மீண்டும் அரங்கேற்றம் நடத்தஅனைவரையும் திரட்டிக் கொண்டு அவ்வை சண்முகம் சாலைக்கு அணிதிரண்டு போங்க..
நடிச்சுஉழைச்சுசேர்த்த கடைசி காசு வரைஎடுத்துப் போட்டு கட்சிய காப்பாத்துன அம்மா போல இருக்குறத எல்லாம் எடுத்து வச்சு இக்கட்டில் இருக்கும் கட்சியைதிக்கெட்டும் ஜோலிக்க வைங்க..
ஒன்றினைந்த கட்சியாக்கி உருப்படியான கூட்டணி அமைங்க..அம்மாவோடு இருந்த அனுபவம் கொண்டுஅடுத்த தலைமுறைக்கு கட்சியை சேருங்க..
தலைமையை தொண்டனே தீர்மானிக்க வேண்டும் என்கிற
புரட்சிதலைவரது கட்டளைப்படியே உட்கட்சித் தேர்தலை நடத்திக் காட்டுங்க..
எடப்பாடி பறித்த தொண்டன் உரிமையை தொண்டனுக்கே திருப்பிக் கொடுங்க உங்க மீது படர்ந்த பழிகளை உருத்தோடு துடைத்து ஏறிங்க பாசத்தாயின் “அந்த நூறாண்டுகள் ஆனாலும்” என்கிற கடைசிச் சூளுரையை கச்சிதமா நிறைவேத்தி காட்டுங்க..
அதை விட்டுப் போட்டு டெம்போ டிராவலர் பயணம் எல்லாம் தம்பிடிக்கு உதவாதுங்க மேலே சொன்னதை எல்லாம் மெனக்கெட்டு முடிச்சிட்டு தேரேறி வாங்க உங்களை தொண்டன் தெய்வமேன்னு கும்பிடுவான்..
இதையெல்லாம் உங்களால நடத்திக் காட்டமுடியுங்க.. ஏன்னா முப்பத்து மூனு வருசமா அம்மாவோடு அருகிருந்து நீங்க தூக்கி வளர்த்த குழந்தையே அண்ணா தி.மு.க தானுங்கோ..
ஆக..சின்னம்மா சீக்கிரமா களத்துல இறங்குங்கோ.. என்ன நாஞ் சொல்றது..?’’ என பதிவிட்டிருக்கிறார்.