தொண்டனின் சாபம் சும்மா விடாது! அழகுராஜ் ஆதங்கம்!

பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு (?) செய்யப்பட்ட பின் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அ.தி.மு.க.வினர் மிகவும் சோர்வடைந்துள்ளனர். இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க குழுவெல்லாம் உருவாகியிருக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மிகுந்த நம்பிக்கை பெற்றவரும், அவர் தேர்தல் சமயத்தில் சொல்லும் குட்டிக்கதைகளுக்கும், அறிக்கைகளுக்கும் சொந்தக்காரர் மருது அழகுராஜ். அ.தி.மு.க. தொடர் தோல்விகளிலிருந்து மீளவேண்டும் என்றால் ‘இணைப்பு ஒன்றே வழி’ என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் மருது அழகுராஜ்.

மருது அழகுராஜ் தினந்தோறும் தனது வலைதளப்பக்கத்தில் அ.தி.மு.க.வினரும், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கும் யோசிக்கும் படியாக சில பதிவுகளையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில்,

‘‘தொண்டனின் சாபம் சும்மாவிடாது..!’’எனும் தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில்,

‘‘ஏம்ப்பா எடப்பாடி அண்ணாதி.மு.க தொடங்கப்பட்டு 50 வருடங்களை நிறைவு செய்து பொன்விழா கண்டதே…

அதுக்காக ஏதேனும் ஒரு விழா எடுத்து கட்சிக்காக உழைச்சவன் உயிர் கொடுத்தவன் இவர்களை எல்லாம் அழைச்சு அவர்களின் தியாகங்களை பாராட்டினியா…

ஒரு தெருக்கூட்டமாவது நடத்தினியா சரி அது போகட்டும்….

தன் உடல் நலம் பேணாது தன்னலம் கருதாது 33 வருசம் உழைச்சு அரசியல் பழிவாங்கல்களுக்காக ஜெயிலுக்கெல்லாம் சென்று உன்னப் போல திமுகவோடு டீல் போட்டுக்கிட் உல்லாசமா வாழாது…

கடைசியில் வாக்குகளால் வீழ்த்த முடியாத அந்த தாயை வழக்குகளால் சாய்ச்சானுகளே…

அப்பக் கூட உடல் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் சிரமங்களை சுமந்து அவுங்க அமைச்சுக் கொடுத்த முதலமைச்சர் சிம்மாசனத்துல தானே நாலரை வருசம் ஒக்காந்து நாலஞ்சு லட்சம் கோடிகளை அறுத்துக் குவிச்சே…

அதுக்கு நன்றிக் கடனாவாவது அந்த தியாத் திருமகளுக்கு ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தினியா..-?

கொடநாடுல தூரு வாருனே.. அம்மாவோட நிரந்தர பொதுச்செயலாளர் பதவிய பறிச்சிக்கினே…

கட்சியின் நிறுவனர் எம்ஜி ஆர் தன் தொண்டர்களுக்கு தந்த உரிமையை பறிச்சிக்கினே..

இதெல்லாம் தப்புன்னு சொன்ன எல்லோரையும் கட்சியவிட்டு நீக்கிக்கினே…

ஆனா ஒன்னுமட்டும் சத்தியம் உனக்கெல்லாம் நல்ல சாவே வராது.. நீ செய்யும் இந்த துரோகங்களையும் பாவங்களையும் உன் வம்சாளிகள் சுமக்கும்..

இது சத்தியம்… என்ன நாஞ் சொல்றது..!’’என பதிவிட்டிருக்கிறார் மருது அழகுராஜ்.

மருது அழகுராஜின் வார்த்தைகளில் ‘கடுமை’ இருந்தாலும், அடிமட்டத் தொண்டனின் எண்ண ஓட்டத்தைத்தான் அப்படியே பதிவிட்டிருக்கிறார்.

By R Priyu

Related Post