தமிழகத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் அவர்கள் மண்ணெண்ணெய் அரிக்கன் விளக்கை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் பேசியபோது, ‘‘ விடியா திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வருடத்தில் மூன்று முறை மின்கட்டணத்தை உயர்த்தி சாமானிய மக்களை துன்புறுத்துகிறார்கள்.
விடியா தி.மு.க தேர்தல் அறிக்கையில் 221 இல் கூறியது போல் மாதம் மாதம் மின் கட்டணம் கணக்கிடப்படும் என்று சொன்னார்கள் ஆனால் அவ்வாறு செய்யாமல் மக்களுக்கு துரோகம் செய்கின்றார்கள் அத்தியாவாசி பொருட்களான நியாய விலை கடையில் பாமாயில் பருப்பு ஆகியவற்றை நிறுத்தி விட்டு மற்ற பொருட்களுக்கெல்லாம் விலையை அதிகப்படியாக உயர்த்தி உள்ளது இந்த விடியா திமுக ஆட்சி.
தமிழகத்தில் தினம் தினம் கொலை கொள்ளை கற்பழிப்பு மற்றும் கள்ளச்சாராயம் போதை பழக்கவழக்கங்கள் போன்ற சம்பவங்களால் அமைதியாக இருந்த தமிழ்நாடு தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. சொத்துவரி வீட்டு வரி குடிநீர் வரி கழிவுநீர் வரி இணைப்பு கட்டணம் சொத்து பத்திர பதிவு கட்டணம் ஆகியவற்றை பல மடங்காக உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது இந்த வீடியோ திமுக அரசு.
மின்வெட்டு காரணத்தினால் தான் 2011ல் திமுகவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகுத்தினார்கள் அதே நிலைமை தற்போதும் உருவாகிக்கொண்டிருக்கிறது. தமிழக முதல்வராக உள்ள ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி சொல்வதைப் போல் சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்வோம் என மாறுதட்டி மேடையில் சொல்கிறார். ஆனால் சொன்னது போல் வரிகளை உயர்த்த மாட்டோம் என்று சொல்லி தற்போது பலமடங்காக வரிகளையும் கட்டணத்தையும் உயர்த்தி உள்ளது இந்த விடிய ஆட்சி.
மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணம் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு ஆகிய கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு மக்களை வஞ்சித்து வருகிறது மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும் கட்டண உயர்வுகளை திமுக அரசும் மத்திய அரசும் உடனே ரத்து செய்ய வேண்டும்
கொரோனா காலங்களில் சிறப்பாக ஆட்சி செய்த எடப்பாடி யார் இக்கட்டான காலகட்டத்தில் கூட எந்த ஒரு வரியையும் உயர்த்தாமல் மக்களின் நலனுக்காக மட்டும் பாடுபட்ட புரட்சித் தமிழர் எடப்பாடி யார் 2026 இல் விடியா தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு விரட்டி புரட்சித்தலைவர் அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் மீண்டும் தமிழக முதல்வராக அரியணை ஏறுவதை எந்த தீய சக்தியினாலும் தடுக்க முடியாது’’ என ஆர்ப்பாட்டத்தில் மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் டாக்டர் பா சரவணன் இவ்வாறு கூறினார்.