பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர் என்.டி.சந்திரமோகன். இவர் மறைந்த முன்னாள் வனத்துறை அமைச்சரின் சகோதரர் மகன் ஆவார்.
பெரம்பலூர் தொகுதியைப் பொறுத்தளவில் முத்தரையர்கள் அதிகம் வசிக்கிறார்கள். வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்கள் முத்தரையர்கள் என்பதால் அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் தொட்டு முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவது வழக்கம். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமியும், முத்தரையர் சமுதாயத்தில் எந்தவொரு அவப்பெயரிலும் சிக்காத என்.டி.சந்திரமோகனை வேட்பாளராக அறிவித்தார்.
என்.டி.சந்திரமோகனை வேட்பாளராக அறிவித்தபோதே, அதே சமுயாத்தைச் சேர்ந்த மாஜிக்கள் அவர் தேர்தலில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக கே.என்.நேருவின் மகன் அருண் நேருவிற்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தனர். இன்னும் சொல்லப் போனால், அந்த தரப்பில் இருந்து அ.தி.மு.க.வில் முக்கிய நிர்வாகிகளுக்கு விட்டமினும் மறைமுகமாக கொடுக்கப்பட்டு விட்டது.
அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில் ஒட்டுக்கு பணம் கொடுக்கவில்லை. குறைந்தது ரூ.200 கொடுத்திருந்தால் கூட அ.தி.மு.க. வேட்பாளர் என்.டி.சந்திரமோகன் வெற்றி பெற்றிருப்பது உறுதி. பணம் கொடுக்காமலேயே இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார் என்.டி.சந்திரமோகன். கே.என்.நேருவிற்கு இணையாக பணம் கொடுத்த பச்சமுத்து (பாரிவேந்தர்) டெபாசிட் இழந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மா.செ.வை அ.தி.மு.க.வில் நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில்தான் பெரம்பலூர் தொகுதியில் முத்தரையர் மக்களிடையே அதிக செல்வாக்குடன் வலம் வரும் என்.டி.சந்திரமோகன் எங்கே மாவட்டச் செயலாளராக ஆகிவிடுவார் என்று ‘மாஜி’க்களும், மா.செ.க்களும் அவர் மீது அவதூறை கிளப்பி வருகிறார்களாம்.
அதாவது, கே.என்.நேருவிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிவிட்டார் என்.டி.சந்திரமோகன் என அ.தி.மு.க.வில் உள்ள சில ஒ.செ.க்களை வைத்தே அவதூரை கிளப்பி வருகிறார்களாம்.
ஒருவிஷயம், மறைந்த வனத்துறை அமைச்சர் என்.செல்வராஜும், அமைச்சர் கே.என்.நேருவும் கீரியும், பாம்புவையும் போல் இருந்தவர்கள். அப்படியிருக்கையில் அவர் வழி வந்த என்.டி.சந்திரமோகன் நேருவிடம் பணம் வாங்குவாரா? என உண்மையான ரத்தத்தின் ரத்தங்கள் மனதிற்குள் பேசி வருகிறார்கள். இதையெல்லாம் தாண்டி என்.டி.சந்திரமோகன் எடப்பாடி பழனிசாமியின் குட்புக்கில் இடம்பிடித்திருக்கிறாராம். இதுதான் மா.செ. மற்றும் மாஜிக்களுக்கு வயிற்றெரிச்சலை கிளப்பியிருக்கிறதாம்.
ஒரு தேர்தலில் நின்றுப்பார்… ‘வலி’கள் புரியும் என்பார்கள்… தேர்தலில் நின்று செலவும் செய்து தோற்றவர் மீது இப்படி அவதூறை சொந்தக் கட்சியினரே வாரியிரைப்பதுதான் கொடுமையிலும் கொடுமை..!
அரசியல்ல இதெல்லலம் சகஜமப்பா… எடப்பாடியாருக்கு தெரியாதா என்ன..?