தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட கனிமொழி, நிவாரண உதவி வழங்கியதோடு, இரங்கல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
சமீபத்தில் குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில் பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் உயிரிழந்தார். இந்த நிலையில்தான் அவரது குடும்பத்தினருக்கு தூத்துக்குடி எம்.பி., கனிமொழி ஆறுதல் கூறியதோடு, தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண நிதியை வழங்கினார்.
அதே போல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர தமிழ்ச் செல்வி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் கனிமொழி எம்.பி.!