தி.மு.க. ஆட்சியின் அவலங்களை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் போராட்டங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்து வரும் நிலையில், மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் ‘நண்பேன்டா’ ஸ்டைலில் கைகோர்த்து இருப்பதாக மருது அழகுராஜ் பரபரப்பு குற்றச்சாட்டை பற்றவைத்திருக்கிறார்!

மருது அழகுராஜ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ‘‘நண்பேன்டா’’ என்ற தலைப்பில் பதிவிட்ட கருத்துத்தான் ஒவ்வொரு அ.தி.மு.க.வில் உள்ள அடிமட்டத் தொண்டனையும் சிந்திக்க வைத்திருக்கிறது.
அதாவது ‘நண்பேன்டா’ என்ற தலைப்பில், ‘நான் முதலமைச்சராக இருந்து வசித்த வீடு எனக்கு ரொம்ப ராசியான வீடு அந்த வீட்டையே எனக்கு ஒதுக்க வேண்டும்’ இது தான் திமுக ஆட்சி அமைந்ததும் எடப்பாடி வைத்த முதல் கோரிக்கை அது உடனே நிறைவேற்றப்பட்டது…
அடுத்து, கொடநாடு கொலை கொள்ளை வழக்கு…
சம்பந்தி மீதான 4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு…
11மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் நடந்த ஊழல் வழக்கு…
ஸ்மார்ட் சிட்டி வழக்கு… 2லட்சம் டன் நிலக்கரி காணாமல் போன விவகாரம்…
உள்ளிட்ட அனைத்து ஊழல் வழக்குகளையும் கிடப்பில் போட வேண்டும் என்கிற எடப்பாடியின் வேண்டுகோளும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அடுத்து, 2021 சட்டமன்ற தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தாக எடப்பாடி மீது தொடரப்பட் வழக்கில் “அப்படி தகவல்களை மறைப்பது ஒன்றும் பெரிய குற்றமில்லை” என அரசுத் தரப்பு நீதிமன்றத்திலேயே தெரிவித்து எடப்பாடியை காப்பாற்றி வருவது…
அடுத்து, மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் அவர்களை முதல்வரிசையில் அமர்த்துவது எனது தனிப்பட்ட உரிமை என்று சபாநாயகர் உறுதிகாட்டிய நிலையில்..
முதல்வர் ஸ்டாலினே எழுந்து நின்று எடப்பாடியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைக்க உடனே ஓ.பி.எஸ்ஸின் இருக்கை மூன்றாவது வரிசைக்கு மாற்றப்பட்டது..
அடுத்து திமுக வுக்கும் எடப்பாடி திமுக-வுக்கும் துரைமுருகன் மூலமாக புரோக்கராக செயல்பட்டு வருகிறகே.பி.முனுசாமிக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய குவாரி உரிமங்கள் மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் பெட்ரோல் பங்க் உரிமங்கள் வழங்கப்பட்டது…
மேலும் இன்றுவரை எடப்பாடியின் உறவினர் நிறுவனங்களுக்கு அரசு டெண்டர்கள் மற்றும் காண்ட்ராக்ட் வேலைகளை தொடர்ந்து வழங்கி எடப்பாடியின் கஜானா நிரம்பி வழிய உதவி வருவது…
இப்படி எடப்பாடியை திமுக ஆட்சி பொத்திப் பாதுகாப்பதும்.. அவரது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவதும் எதற்காக..?
அதிமுகவை தொடர்ந்து பிளந்து வைத்து திவாலாக்கவும்… அதன் மூலம் திமுகவை தொடர்ந்து வாழவும் ஆளவும் வைக்கவும்தானே..? என்ன நாஞ் சொல்றது..?’’ என பதிவிட்டிருக்கிறார்.
ஒவ்வொரு பதிவும், அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டன் ஒவ்வொருவரையும் யோசிக்க வைத்திருக்கிறது.