கஞ்சாவால் தள்ளாடும் ‘தலைநகர்’!

Blooming cannabis ready to be used for extraction into various products medical and food or drink even for entertainment.

ஆண்மையை இழக்கும் அபாயத்தில் இளைஞர்கள்

தலைநகர் சென்னையில் இளைஞர்கள் அதிகளவில் கஞ்சாவுக்கு அடிமையாகின்றனர். இதனால், இளைஞர்கள் ஆண்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டு, அவர்களது எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாக நிற்கிறது என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

2025 ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் இறுதி வரையிலான ஏழு மாதங்களில் மட்டும், சுமார் 700-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவாகி தலைநகர் சென்னையை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சமீபத்தில் சென்னை புளியந்தோப்பில், மாணவர்களிடம் செல்போன் பறித்த இரண்டு நபர்களைக் கைதுசெய்தபோது, கஞ்சா போதையிலிருந்த அவர்கள், திடீரென போலீஸார்மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் காவல்துறையில் பணியாற்றும் பாரதி என்பவரின் கணவர் இளவரசன், கஞ்சா போதையில் தன் மனைவியை அரிவாளால் தாக்கிய சம்பவம்… சென்னை திருப்போரூரிலிருந்து பாரிமுனைக்குச் செல்லும் அரசுப் பேருந்து நடத்துனர் மோதியை, கஞ்சா போதை இளைஞர்கள் சரமாரியாகத் தாக்கிய சம்பவம், சென்னை மருத்துவக் கல்லூரி விடுதியில் பயிற்சி மருத்துவர்கள் மூன்று பேர் கஞ்சா போதையில் செய்த கலாட்டா என… சென்னையில் கஞ்சா போதையில் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கஞ்சா புழக்கத்தை போலீசார் தடுத்து வந்தாலும், தலைநகர் சென்னையில் கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தினம்தோறும் வழக்குகள் பதிவாகி வருவதும் குறிப்பிடத் தக்கது.

சென்னை மாநகரில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவது பற்றி சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘ தலைநகர் சென்னையில் கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் சமூக விரோரிகளின் கைகளில் மட்டும் புழங்கி வந்த கஞ்சா தற்போது, பள்ளி, கல்லூரி மாணவர்களிடேயே அதிக புழக்கத்தில் இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே கஞ்சாவை விற்கின்றன ஒரு கும்பல். இதனை முதலில் பயன்படுத்த தயங்கும் மாணவர்கள், பின்னாளில் கஞ்சாவிற்கே அடிமையாகிவிடுகின்றனர்.

தமிழகத்தில் பிற மாவட்டங்களில் கஞ்சாவை மாவட்டப் போலீசார் ஓரளவு தடுத்திருக்கின்றனர். ஆனால், தலைநகர் சென்னையில்தான் கஞ்சா கடத்தும் வழக்குகள் அதிகளவில் பதிவாகின்றனவே தவிர, கஞ்சாவை ஒழித்த பாடில்லை. கடல் வழியாகவும், சாலைப் போக்குவரத்து வழியாகவும் சென்னைக்கு கொண்டுவரப்படும் கஞ்சாவை மாணவர்களுக்கு கொடுத்து அவர்களை அடிமையாக்கி வருகின்றனர். இது மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தையே கேள்வி குறியாக்கிவிடும். எனவே, சென்னையில் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிப்பதற்கு போலீசார் துரித நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்’’ என்றனர்.

கஞ்சாவை இளைஞர்கள் பயன்படுத்துவதால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சில மருத்துவர்களிடம் பேசியபோது , ‘‘சார் கஞசாவை பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்துவதுதான் வேதனையை அளிக்கிறது. இப்படி மாணவர்கள்தான் கஞ்சா போதைக்கு அடிமையாக, சமூக நலனுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது.

கஞ்சா பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனரீதியான பல்வேறு தீமைகள் ஏற்படலாம், மேலும் நீண்டகால பயன்பாடு விந்தணுக்களின் உற்பத்தி குறைவு, இரத்த அழுத்த குறைவு மற்றும் இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்ற ஆண்மை இழப்புக்கான அபாயங்களை அதிகரிக்கும். இது தவிர, மனநோயின் அபாயம், சுவாசப் பிரச்சனைகள், குமட்டல், மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்தினால் குழந்தைகளின் நடத்தை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
1, ஆண்மை இழப்பு: கஞ்சா பயன்பாடு விந்தணு உற்பத்தி குறைவு மற்றும் இரத்த அழுத்த குறைவு காரணமாக ஆண்மை இழப்பு மற்றும் ஆண்மைக் குறைவுக்கு வழிவகுக்கும்.
2, மனநலப் பிரச்சனைகள்: கஞ்சா பயன்பாட்டிற்கும் மனநோய் ஏற்படும் அபாயத்திற்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.
3, இதய மற்றும் சுவாசப் பிரச்சனைகள்: இது இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும், மேலும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தலாம்.
4, கர்ப்ப காலத்தில் ஏற்படும் பாதிப்புகள்: கர்ப்பிணிப் பெண்கள் கஞ்சாவைப் பயன்படுத்தினால், அது குழந்தைகளின் நடத்தைப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
5, பிற பக்க விளைவுகள்: உலர் வாய், கண்கள் சிவத்தல், மயக்கம் போன்ற குறுகிய கால பக்க விளைவுகளும் ஏற்படலாம்.
6, குறைந்த விபத்து அபாயம்: கஞ்சா பயன்பாடு இரத்த அழுத்தத்தைக் குறைத்து, மயக்கத்தை ஏற்படுத்தி, விபத்துக்களால் ஏற்படும் காயங்கள் அல்லது இறப்புக்கான அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, கஞ்சாவின் பயன்பாடு பல உடல் மற்றும் மனநலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், அதைத் தவிர்ப்பது நல்லது.

இந்த வருடத்தில் 7 மாதங்களில் 700க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவாகியிருக்கிறது. அப்படியென்றால், எத்தனை ஆயிரம் இளைஞர்களும், மாணவர்களும் கஞ்சாவிற்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்பது தெரியும். கஞ்சாவிற்கு அடிடையானவர்கள் திருமணத்தைப் பற்றியே சிந்திக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, இளைஞர்கள் கஞ்சா புழக்கத்திலிருந்து உடனடியாக தங்களை விடுவித்துக்கொண்டால்தான், குடும்பத்தைப் பற்றியே யோசிக்க முடியும்’’ என்று எச்சரிக்கையுடன் முடித்தார்.

சென்னை மாநகர காவல்துறை கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

By admin

Related Post