கசப்பை மறக்க வைத்த ‘கோட்’! கைகோர்த்த விஜய் – சங்கீதா!

விஜய் நடிப்பில் ‘கோட்’ படம் இன்று வெளியாகியிருக்கிறது. வெங்கட் பிரபு முதன்முறையாக விஜய்யை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அதன் காரணமாக உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்புடன் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துவருகின்றனர். சூழல் இப்படி இருக்க விஜய் தனது மனைவி சங்கீதா மற்றும் மகன், மகள், தந்தை, தாயுடனும் ‘கோட்’ படத்தை பார்த்ததாக கூறப்படுகிறது.

விஜய்யை வைத்து வெங்கட் பிரபு ‘கோட்’ படத்தை இயக்கியிருக்கிறார். அஜித்தை வைத்து அவர் இயக்கிய மங்காத்தா படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதால்; கோலிவுட்டின் இன்னொரு பெரிய ஸ்டாரான விஜய்யை வைத்தும் மெகா ஹிட் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்தே இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கும் இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே வெங்கட் களமிறக்கியிருக்கிறார்.

படமானது அறிவித்தபடி இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியிருக்கிறது. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. முக்கியமாக கொஞ்சம் ட்ரோலுக்கும் ஆளானது. எனவே இப்படத்தை ரொம்பவே கவனமாக கையாண்டிருக்கிறார் வெங்கட் பிரபு. முதல் நாள் காட்சியை திருவிழா போல் கொண்டாடிவருகிறார்கள் விஜய் ரசிகர்கள். பட்டாசு வெடித்தும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் தியேட்டரையே தெறிக்கவிடுகின்றனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க சென்ற தங்களுக்கு வெங்கட் பிரபு செம ட்ரீட் வைத்துவிட்டார்.

படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ்கள் இருக்கின்றன. தங்களை படம் ரொம்பவே திருப்திப்படுத்திவிட்டதாக உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள். மேலும் அஜித்துக்கு எப்படி மங்காத்தா கொடுத்தாரோ அதேபோல் தளபதிக்கு ‘கோட்’ கொடுத்துவிட்டார். இனி எங்களின் ஃபேவரைட் இயக்குநர்கள் லிஸ்ட்டில் வெங்கட்டும் ஒருவர் என்று உச்சிமுகர்ந்துவருகின்றனர்.

இன்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் திரிஷா படத்தை பார்த்தார். அதேபோல் வெங்கட் பிரபு தனது செட்டுடன் சென்னை கமலா திரையரங்கில் படம் பார்த்தார். அதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் படு ட்ரெண்டாகியிருக்கின்றன. கண்டிப்பாக முதல் நாளில் வசூல் சாதனையை ‘ கோட்’ படைக்கும் என்று ரசிகர்கள் உறுதியாக சொல்லிவருகின்றனர். இந்தச் சூழலில் விஜய்யும் ‘கோட்’ படம் பார்த்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.

அதாவது சென்னை அடையாறில் இருக்கும் ஒரு திரையரங்கில் தனது மனைவி சங்கீதா, மகன் ஜேசன், மகள் சாஷா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோருடன் நேற்று மாலை ‘கோட்’ படத்தின் சிறப்பு காட்சியை பார்த்ததாகவும்; அப்போது வெங்கட் பிரபு, அர்ச்சனா உள்ளிட்டோர் உடனிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் விஜய்யின் குடும்பத்தினருக்கும் ‘கோட்’ படம் பரம திருப்தியை தந்திருக்கிறதாம். முக்கியமாக மனைவி சங்கீதா படத்தை ரொம்பவே ரசித்து பார்த்ததாகவும்; வெங்கட் பிரபுவை பாராட்டி தள்ளியதாகவும் திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள், விஜய்க்கும் சங்கீதாவுக்கும் பஞ்சாயத்து என்று யாருப்பா சொன்னது என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

ஆக மொத்தத்தில் விஜய்க்கும், சங்கீதாவுக்கும் கசப்பு இருந்தாலும், ‘கோட்’ மறக்க வைத்துவிட்டது என்கிறார்கள்.

By R Priyu

Related Post