சிக்கிய ஆண்கள்! ரகசிய வீடியோ! சத்தியாவுக்கு ஜாமீன்!

திருமணமாகாத ஆண்களை குறிவைத்து வீடியோ எடுத்து பணம் பற்றி திருப்பூர் சத்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.

கொடிமுடியை சேர்ந்த 30 வயது பெண் சத்யா. திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. எனினும், தனக்கு திருமணம் ஆகவில்லை என்று சொல்லி, திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து, அவர்களை திருமணம் செய்து ஏமாற்றி பணம், நகை மோசடி செய்து வந்துள்ளார்.

அந்தவகையில், தாராபுரத்தை சேர்ந்த 30 வயது பேக்கரி ஓனர், சத்யாவின் வலையில் விழுந்தார். திருமணத்துக்காக மேட்ரிமோனியலில் பதிவு செய்தபோது, சத்யாவின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவருடன் பேசி தன்னை நெருக்கமாகி கொண்டார் சத்யா. இதனால் சத்யாவை மிகவும் பிடித்துப்போய்விட்டதால், அவரையே திருமணம் செய்யவும் முடிவெத்தார் பேக்கரி ஓனர்.

திருமணமான ஒருசில நாட்களில், சத்யா பெயரை ரேஷன் அட்டையில் பதிவதற்காக முனைந்தபோதுதான், “கணவர்” என்ற இடத்தில் வேறொருவர் பெயர் இருப்பதை கண்டு பேக்கரி ஓனர் அதிர்ந்தார். இதனால் சந்தேகமடைந்த அவர், சத்யா குறித்து கொடிமுடிக்கே நேரடியாக சென்று விசாரித்துள்ளார். அப்போதுதான் ஏற்கனவே பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றி நகை-பணம் பறித்து வந்தது தெரியவந்தது.

ஈரோடு, திருப்பூர், கோவை, சென்னை என பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள், சர்வேயர், டிஎஸ்பி, சப்-இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜினீயர், திருமணமாகாத இளைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், ஆடு மேய்ப்பவர்கள், மாடு மேய்ப்பவர்கள் என 55 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும், லட்சக்கணக்கில் இவர்களிடம் நகை, பணத்தை சத்யா பறித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, தாராபுரம் மகளிர் போலீசில் பேக்கரி ஓனர் புகார் தரப்பட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த சத்யாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையும் மேற்கொண்டனர். அப்போது போலீஸ் தரப்பில் இதுகுறித்து சொல்லும்போது, “மேட்ரிமோனியில் பெண் தேடி வரும் ஆண்களின் செல்போன் நம்பருக்கு பேசி அவர்களை தனிமையில் சந்திப்பாராம். பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாகவும் இருப்பாராம். இதை ரகசியமாக வீடியோ எடுத்து, பணம், நகை கேட்டு அவர்களை மிரட்டுவாராம். இது தொடர்பாக போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது என்கிறார்கள்.

இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் சத்யா.. இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்ற கூறி ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், சத்யாவுடன் நிழல்போல ஒட்டிக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வி என்பவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். ஏனென்றால், பேக்கரி ஓனர் மகேஷூக்கும், சத்யாவுக்கும் திருமணத்தை நடத்தி வைத்ததே இந்த தமிழ்ச்செல்விதானாம்..

இவர் சத்யாவின் உறவினர் என்றும் சொல்கிறார்கள். இவரை பிடித்து விசாரித்தால்தான், சத்யாவால் எத்தனை ஆண்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்? நகை, பணம் குறித்த விவரம் தெரியவரும் என்பதால், தமிழ்ச்செல்வியையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கில், தனக்கு முன்ஜாமீன் கோரி, தமிழ்செல்வி ஏற்கனவே மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவும் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

By R Priyu

Related Post