உதயநிதியின் கார் முற்றுகை..! திருவொற்றியூரில் திடீர் பரபரப்பு!

சென்னை திருவொற்றியூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையின் இன்று இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சேகர் பாபு, வடசென்னை எம்.பி. உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் செல்லும்போது, திடீரென் பெண்கள் தங்களை கையில் மனுவுடன் உதயநிதியின் காரை முற்றுகையிட்டனர்.

அமைச்சர் உதயநிதிக்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் பெண்கள் உள்ளிட்ட சிலரை அப்புறப்படுத்த முயற்சித்தனர். ஆனாலும், அமைச்சரைப் பார்த்து மனுகொடுக்காமல் நாங்கள் செல்லமாட்டோம் என உதயநிதியை பார்த்து தங்களுக்கும் வீட்டு மனைப் பட்டா வழங்கவேண்டும் என மனுவை கொடுத்தனர். காவல்துறையினரை சற்று ஒதுங்க சொல்லிவிட்டு அவர்களிடம் மனுக்களைப் பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறும்போது, ‘‘சார், முறையாக தகுதி வாய்ந்தவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கவேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தனர்.

உதயநிதியின் காரை பெண்கள் உள்பட பலர் முற்றுகையிட்டதால், திருவொற்றியூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்பட்டது.

By R Priyu

Related Post