மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை! டாக்டர் சரவணன் பகீர் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது என அ.தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் பா.சரவணன் பகிரங்கமாக குற்றசாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயளாலர்  டாக்டர் பா.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 9 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகிறது இதில் 55 சகவீதம் அரசு மருத்துவமனைகளும், 45 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் பிரசவங்கள் நடைபெறுகிறது.

 குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் தற்பொழுது 19,000 மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். இதில் ஆயிரம் பேர் தான் மகப்பேறு மருத்துவர் உள்ளதாக கூறப்படுகிறது.இதன் மூலம் மகப்பேறு மருத்துவர்களுக்கு கூடுதலாக 3 முதல் 4 விழுக்காடு பணிச்சுமை ஏற்படுகிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் 10,000 பேர் அளவில் மகப்பேறு மருத்துவர்கள் உள்ளனர்.

 பொதுவாக தமிழகத்தில 2000 மகப்பேறு  மருத்துவர்கள் மருத்துவமனைகளில் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும். அப்படி இருந்தால் தான் அரசு மருத்துவமனைகளில் மீது மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். ஏற்கனவே செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டதால் மன்னார்குடியில் உள்ள மருத்துவமனையில் தூய்மை பணியாளரே நோயாளிக்கு ட்ரிப் போட்டது அனைவருக்கும் தெரியும்.

 இன்றைக்கு தமிழகத்தில் பிரசவங்களில் இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சர் மா.சு. கூறுகிறார், கடந்த 10 ஆண்டுகளில் புரட்சித்தலைவி அம்மாவும், எடப்பாடியாரும் சுகாதாரத் துறையை சிறப்பாக செயல்படுத்திய காரணமாகத்தான் இந்த நிலையை எட்ட முடிந்தது.

 குறிப்பாக கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மருத்துவத்துறையில் ஒரு புரட்சி ஏற்பட்டது, 11 அரசு மருத்துவக் கல்லூரியை திறந்து அதன் மூலம் 1450 கூடுதலாக மருத்துவ இடங்களை தமிழகத்தில் கிடைக்க செய்தார். தமிழகத்தில் அதிக அளவில் மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி காட்டிய பெருமை எடப்பாடியாரை சாரும்.

அதனை தொடர்ந்து 2019 ஒரு ஆய்வில் வெளியிட்ட தகவல்படி தமிழகத்தில் 253 நபர்களுக்கு ஒரு மருத்துவரும், இதேடெல்லி எடுத்துக் கொண்டால் 334 மக்களுக்கு ஒரு மருத்துவர், கர்நாடகாவை எடுத்துக் கொண்டால் 507 நபர்களுக்குஒரு மருத்துவர்,கேரளாவை எடுத்துக் கொண்டால் 535 நபர்களுக்கு ஒரு மருத்துவர், கோவா எடுத்துக் கொண்டால் 713 நபர்களுக்கு ஒரு மருத்துவர்,பஞ்சாபை எடுத்துக் கொண்டால் 787 நபர்களுக்கு ஒரு மருத்துவர், பீகாரை எடுத்துக் கொண்டால் 3,207 நபர்களுக்கு ஒரு மருத்துவர்,உ.பியை எடுத்துக் கொண்டால் 3,767 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இருந்தது.

2000 அம்மா மினி கிளினிக் மூலம் ஆண்டுதோறும் 25 லட்சம் மக்களை பயனடைய செய்தார்  எடப்பாடியார் மத்திய அரசிடம் போராடி பெற்று தந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கூட தற்போது மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளது இதையெல்லாம் எதையும் செய்யாமல், எடப்பாடியார் செய்த திட்டங்களை, சாதனைகளை பின்பற்றி தங்கள் சாதனை போல சொல்லி வருகின்றனர்

 இனியாவது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் துணை மருத்துவமனைகள், வட்டார அளவில் உள்ள மருத்துவமனைகள், மாநகராட்சி பகுதியில் உள்ள மருத்துவமனைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு காலியாக உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணிஉதவியாளர்களை நியமிக்க வேண்டும்’’ என கூறினார்

By R Priyu

Related Post